முக்கிய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தங்களின் மேலான கருத்தை இங்கு பதிவு செய்யவும். உங்களின் இடம், வீடு, கடை, விற்பனை செய்ய இதில் இலவசமாக விளம்பரம் செய்து பயனடையுங்கள்.

Monday, June 11, 2012

முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவ / மாணவிகளுக்கு சிறப்புப்பரிசு!

பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டதால் நமதூரைச்சார்ந்த அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ / மாணவிகள் தக்க சான்றுகளுடன் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள சகோதரர்களையோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புக்கொள்ளூமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



ஏற்கனவே நாம் வெளியிட்ட செய்தியும் தங்கள் பார்வைக்கு....


http://www.nidurneivasal.org/2011/04/blog-post_10.html


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) 


நமதூரின் முன்னேற்றத்திற்காகவும், நமது இஸ்லாமிய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும் நமது துபாய் சங்கமானது பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகளையும், சேவைகளையும் செய்துவருவதை அனைவரும் நன்கு அறிவோம். அதில் ஒரு பகுதியாக சுமார் கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்டிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவச்செல்வங்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்கிவரும் சேவையின் அடுத்த கட்டமாக சென்ற ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு இறுதித்தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் நமதூரைச்சார்ந்த இஸ்லாமிய மாணவச்செல்வங்களுக்கு சிறப்பு பரிசுகள் பரிசினை வழங்கினோம்.

அதன் தொடர்ச்சியாக இன்ஷா அல்லாஹ் தற்போதைய கல்வி ஆண்டின் (2011 - 2012) இறுதித்தேர்வில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவ / மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் மூன்றாயிரமோ அல்லது அதற்கு இணையான பரிசுபொருட்களோ, இரண்டாம் பரிசாக ரூபாய் இரண்டாயிரமு மோ அல்லது அதற்கு இணையான பரிசுபொருட்களோ வழங்க இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவர் / மாணவிகள் அதற்கான மதிப்பெண் பட்டியலை எமது நிர்வாகிகளிடம் சமர்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இமெயில்: nidurneivasal@gmail.com

நமது சங்கத்தின் உறுப்பினர்களும், நமதூரைச்சார்ந்த இதர சகோதரர்களும் இச்செய்தியினை மற்றவர்களுக்கும் தெரிவித்தார்களேயானால் மிக பயனுள்ளதாக இருக்கும்.

இன்ஷா அல்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையைக் கொண்டு அனைத்து மாணவச்செல்வங்களும் சிறப்பான முறையில் வெற்றிபெற வாழ்த்துகிறோம். நன்றி: http://www.nidurneivasal.org/

No comments:

Post a Comment

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது இஸ்லாமிய பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு! எனவே மற்றவரின் அந்தரங்க வாழ்வை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும்