முக்கிய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தங்களின் மேலான கருத்தை இங்கு பதிவு செய்யவும். உங்களின் இடம், வீடு, கடை, விற்பனை செய்ய இதில் இலவசமாக விளம்பரம் செய்து பயனடையுங்கள்.

Thursday, March 3, 2016

நீடூர் நியாய விலை கடையின் அவல நிலை மாறுமா?

Mohammed Ameen's photo.
இது இன்று ஒரு நாள் நடக்கும் கூத்து அல்ல தினம் தினம் அரங்கேரும் காட்சி!
சிலக்கு நீடூர் அங்காடியை நினைத்தாலே நெஞ்சம் நடுங்கும் காரணம் அந்த (அ) நியாய விலை(எடை) கடையை நினைத்தால் அப்படித்தான் என்றால் அது மிகையல்ல.
எந்த நேரத்தில் என்ன பொருள் வழங்கபடும் என்று யாருக்கும தெரியாது காரணம் முன்கூட்டியே தெரிவித்தால் அனணவரும் வந்துவிடுவார்கள். பிறகு அணைவருக்கும் கொடுக்கவேண்டிவரும்.

2ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு ஒரு கடை மட்டுமே அதனால் தினம் தினம மக்கள் அவதி ஒரு நாளைக்கு ஒரு பொருள் மட்டுமேவழங்கப்படும். அதனால் தினமும் கடைக்கு சென்று விசாரித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் அனைத்துபொருட்களும் நமக்கு கிடைக்கும் இல்லை என்றால் அது காணாமல் போய்விடும்.
பத்து மணிக்கு சாமான் வாங்க காலையில் 7 மணிக்கெல்லாம் சிலர் வந்து காத்திருப்பார்கள் சிலர் தனக்கு பதிலாக கல்லையும் பிலாஸ்டிக் பைகளையும் வைத்து இடம் பிடிப்பதையும் காணமுடியும்
9 மணி முதல் வேலை நேரம் என்று எழுதப்பட்டிருக்கும் ஆனால் 10 மணிக்குமேல் தான் கடை திறக்கப்படும். யாரும் கேட்க ஆள் கிடையாது அதுவே காரணம்.

கேட்டால் "அது அப்படித்தான் சார் "
இதுதான் அவர்களின் பதில் முதலில் இந்த நிலை மாற வேண்டும்.
வெளி சந்தையில் அதிகம் விலை உள்ள துவரம்பருப்பு, பாமாயில், உளுத்தம் பருப்பு போன்ற பொருள்கள் சில மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகின்றன உதாரணத்தைிற்கு சென்ற மாதம் வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரத்தில் கொடுத்துவிட்டு 2 மணிக்கு செல்லும்போது முடிந்துவிட்டது என்று பதில் அளிக்கப்படுகிறது. இப்படி அந்த மாதத்தில் சில மணி நேரம் கொடுக்கப்பட்டாலும் அத்தோடு அது முடிந்து விடும். பிறகு அடுத்த மாதம் மட்டுமே. இப்படி பல மாதங்கள் பல பொருள்களை இழந்தவர்கள் அநேகம் உண்டு.
யாரிடத்தில் முறையிடுவது என்று மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
முப்பது ரூபாய் சீனிக்காக 300 ரூபாய் வேலையை விட்டுவிட்டு வரவேண்டி உள்ளது பொருள் வாங்கவில்லை என்றால் கார்டு போய்விடும் என்று மேலதிகாரியிடம் முறையிட்டபோது அவர் என்ன ? சொன்னார் தெரியுமா?
"ஏன் பாய் அப்படி செய்யிறீங்க பேசாம கார்டை கடையில் கொடுத்தால் நீங்கள் வாங்கியதாக என்டரி போட்டு கொடுத்துவிடுவார்களே!! " என்கிறார் இதைவிட பகல் கொள்ளை வேறு என்ன இருக்க முடியும்.
அநீதியை தட்டி கேட்க வேண்டியவர்களும் வாய்திறந்து பேசுவதில்லை காரணம் முறைப்படி நியாயவிலை கடைகாரர்களால் கவணிக்கப்பட்டுவிடுகின்ரனர்
மக்கள் வேண்டுவது இது தான் எந்த நேரத்தில் வந்தாலும் நமது பொருளை வாங்கலாம் என்ற நிலை வேண்டும். ஒருமாத காலம் இருக்கும்போது எப்போது சென்றாலும் கிடைக்கும் என்றால் மக்கள் இப்படி அலைமோத மாட்டார்கள். நிதானமாக நேரம் கிடைக்கும்போது வாங்க வருவார்கள்.
இன்று வாங்கவில்லை என்றால் நாளை கிடைக்காது முடிந்துவிட்டது என்ற பதில் தொடர்கதையாகி வருவதால்தான் மக்கள் இப்படி அலைமோதுகிறார்கள். அப்படிப்பட்ட மாற்றம் வருமா நமது நீடூர் நியாய விலைகடைக்கு.

No comments:

Post a Comment

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது இஸ்லாமிய பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு! எனவே மற்றவரின் அந்தரங்க வாழ்வை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும்