முக்கிய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தங்களின் மேலான கருத்தை இங்கு பதிவு செய்யவும். உங்களின் இடம், வீடு, கடை, விற்பனை செய்ய இதில் இலவசமாக விளம்பரம் செய்து பயனடையுங்கள்.

Thursday, October 23, 2014

எச். ராஜாவை, எஸ்.ஐ சுட்டால் எப்படி இருக்கும்?

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் செய்யதுவை, உதவி ஆய்வாளர் காளிதாஸ், காவல் நிலையத்திலேயே துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம், தமிழகத்தை கொதிநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
ஏற்கெனவே இதுபோல சென்னை கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள கானத்தூர் காவல் நிலையத்துக்கு, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தையல் தொழிலாளி ஹுமாயூன், காவல்துறையினரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

நேர்மைக்கு இன்னொரு பெயர் ஷேக் லத்தீப் அலீ!


ஹைதராபாத் சஞ்சீவ் ரெட்டி நகரில் வசித்து வரும் ஷேக் லத்தீப் அலீ, B.Tech (Electrical) படித்து வருகிறார். நேற்று காலை லத்தீப் தனது நண்பருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஓர் அரசு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்முக்கு ரூ. 200 பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது தனது ATM அட்டையை இயந்திரத்தில் செருகிய பின்னர், பாஸ் வேர்டை அழுத்தி உள்ளார். அப்போது திடீரென அந்த ATM இயந்திரத்தின் பாகங்கள் திறந்து கொண்டு அதிலிருந்த ரூ. 26 லட்சம் வெளியே வந்து கொட்டியுள்ளது.

சர்வதேசப்பார்வை (செய்திச்சுருள்)

நியூயார்க்கில் ‘ஹலால்’ இறைச்சிக்கூடம்



மூன்று அமெரிக்க முஸ்லிம்களின் முயற்சியால் நியூயார்க் நகரில், ஹலால் இறைச்சி விற்பனைக்காக, பாதுகாப்பான அறுக்கும் கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமயம் சார்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கவனத்தை இக்கூடம் ஈர்த்துள்ளது. மேன்ஹெடன் தெருவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு இது அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இறைக்கட்டளைக்கேற்ப, தூய்மையான முறையில் அறுக்கப்படும் இறைச்சி தங்களுக்குக் கிடைப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்த இறைச்சிக்கூடத்தின் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது. இங்கு கால்நடைகள் இயற்கையான முறையில் பராமரிக்கப்படுகின்றன. ஹார்மோன்களோ செயற்கை கருத்தரிப்புகளோ கிடையாது. எனவே, முஸ்லிமல்லாத வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பைப் பெறுகிறது. இக்கூடத்தின் வாடிக்கையாளர்களில் 60 விழுக்காடு முஸ்லிமல்லாதவர்களே!

இதற்கிடையே, கலிஃபோர்னியா மாநிலத்தின் சான்டீகோ நகர முஸ்லிம் குடும்பங்களில் பலர், பள்ளிகளின் உணவுப் பட்டியலில் ஹலால் உணவையும் சேர்க்க வேண்டும் என்று கோரிவருகின்றனர். இஸ்லாமிய ஷரீஆ முறைக்கு ஏற்ற உணவுகள் பள்ளியில் இல்லாததால் மாணவர்கள் பள்ளி உணவுகளைத் தவிர்த்துவருகின்றனர்.

இதையடுத்து, சோமாலியாவைச் சேர்ந்த பிலால்மூயா ‘உணவு நீதி இயக்கம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார். கல்வித் துறை பொறுப்பாளர்கள், அதிகாரிகளுடன் சந்திப்புக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கின்றனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முஸ்லிம்களும் பங்கெடுத்துக்கொள்கின்றனர்.

பிராய்லர் சிக்கன் பிரியரா நீங்கள் அப்ப இதை முதலில் படியுங்கள்.

ஆன்ட்டிபயாட்டிக்குகளை செயலிழக்கச் செய்யும் சிக்கன்…

பலருக்கும் பிடித்தமான அசைவ உணவு பிராய்லர் சிக்கன். அது தீவனத்துக்குப் பதிலாக ஆன்ட்டிபயாட்டிக் ஊசி போட்டு வளர்க்கப்படுகிறது.

இந்த சிக்கனை சாப்பிடுவதால் காய்ச்சலுக்கும் மற்ற பிரச்சினைகளுக்கும் நாம் சாப்பிடும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் செயலிழந்து போகலாம் என்பதை அறிவியல், சுற்றுச்சூழல் மையம் நடத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.