அமைதியான சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள மரியானா தீவீல் இருந்து 1945-ஆம் காலை 6 மணிக்கு அமெரிக்க விமானப் படையின் பி-29 குண்டுவீச்சு விமானமான எனோலாகே புறப்பட்டது. விமானப்படையில் திறமைப்பெற்ற பைலட் பால் டிபட்ஸ் விமானத்தை இயக்கினார். டிபட்ஸின் தாயாரின் பெயர்தாம் அந்த விமானத்திற்கு சூட்டப்பட்டிருந்தது. அந்த அன்னைக்குள் ஓர் குண்டு இருந்தது. ‘லிட்டில் பாய்’ என்ற சங்கேத மொழியிலான ஒரு பேரழிவு அணுக்குண்டு. அன்று வரை உலகில் எங்குமே உபயோகிக்காத குறிப்பிட்ட ரக குண்டு அது. ஏழு மணிநேர நீண்ட பயணத்தின் இறுதியில் எனோலகே ஹிரோஷிமாவின் வான்வழியை அடைந்தது. நேரம் காலை 8.15 ஹிரோஷிமாவுக்கு மேலே 32 ஆயிரம் அடி உயரத்தில் வைத்து லிட்டில் பாயை கீழே வீசிவிட்டு எனோலாகே அதி வேகமாக பறந்து சென்றுவிட்டது.
Showing posts with label பொதுவானவை. Show all posts
Showing posts with label பொதுவானவை. Show all posts
Sunday, August 31, 2014
உலகம் நடுங்கிய தினம்!
அமைதியான சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள மரியானா தீவீல் இருந்து 1945-ஆம் காலை 6 மணிக்கு அமெரிக்க விமானப் படையின் பி-29 குண்டுவீச்சு விமானமான எனோலாகே புறப்பட்டது. விமானப்படையில் திறமைப்பெற்ற பைலட் பால் டிபட்ஸ் விமானத்தை இயக்கினார். டிபட்ஸின் தாயாரின் பெயர்தாம் அந்த விமானத்திற்கு சூட்டப்பட்டிருந்தது. அந்த அன்னைக்குள் ஓர் குண்டு இருந்தது. ‘லிட்டில் பாய்’ என்ற சங்கேத மொழியிலான ஒரு பேரழிவு அணுக்குண்டு. அன்று வரை உலகில் எங்குமே உபயோகிக்காத குறிப்பிட்ட ரக குண்டு அது. ஏழு மணிநேர நீண்ட பயணத்தின் இறுதியில் எனோலகே ஹிரோஷிமாவின் வான்வழியை அடைந்தது. நேரம் காலை 8.15 ஹிரோஷிமாவுக்கு மேலே 32 ஆயிரம் அடி உயரத்தில் வைத்து லிட்டில் பாயை கீழே வீசிவிட்டு எனோலாகே அதி வேகமாக பறந்து சென்றுவிட்டது.
Thursday, August 28, 2014
பால்காரர் முதல் பிளம்பர் வரை... பெண்களுக்கு காவல்துறை முன்னெச்சரிக்கை அறிவுரை
Saturday, June 23, 2012
பான் கார்டின் முக்கியத்துவம் ( PAN CARD )
நம்மில் பலரிடமும் பான் கார்ட் உள்ளது (Permanent
Account Number-PAN). ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. பான் கார்ட் பற்றிய சில விளக்கங்கள் இதோ...
பான் கார்ட் என்பது 10 இலக்க எழுத்து-எண் கொண்ட அட்டை. இதை வழங்குவது வருமான வரித்துறை. இந்த அட்டை கோரி விண்ணப்பித்து இதைப் பெறலாம். சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.
Friday, June 15, 2012
பெண்களுக்கான நிலைமையில் மிக மோசமான இடத்தில் இந்தியா
உலகில் முன்னேற்றம் கண்டுவரும் மற்றும் செல்வந்த நாடுகள் மட்டத்தில் நடத்தப்பட்டுள்ள ஆய்வொன்றில், பெண்களுக்கான நிலைமைகளில் இந்தியா மிக அடிமட்டத்தில் இருக்கின்ற நாடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபௌண்டேசன் அமைப்பு நடத்திய இந்த ஆய்வில் பெண்களின் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, தொழில் வாய்ப்புகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இந்தியாவில் சீனா உளவாளிகள் கைது: அதிர்ச்சி தகவல்
[ புதன்கிழமை, 13 யூன் 2012, 05:22.20 AM GMT +05:30 ] |
![]() |
இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் இருக்கும் மாநிலம் இமாச்சல் பிரதேசம். இங்குள்ள மாண்டி மாவட்டத்தில் தச்சுத் தொழிலாளியாக பணியாற்றி வந்த சீன நாட்டைச் சேர்ந்த 8 பேரை பொலிஸார் பிடித்து விசாரரித்தனர். அவர்கள் சீன உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான சீன கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது பொலிஸாரின் பிடியிலிருக்கும் அவர்கள், தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். thanks: newindianews |
Subscribe to:
Posts (Atom)