போஸ்ட் ஆபீசுக்கும் பள்ளிவாசல் தெருவுக்கும் இடைப்பட்ட இடத்தில் இன்று மதியம் சுமார் 1.30 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் மயிலாடுதுறையை நோக்கி சென்றுகொண்டிருந்த மணல்மேடு அல்லது பட்டவர்த்தியை சேர்ந்த ஒருவர் எதிரே வந்த 1.C திருச்சிற்றம்பலம் பஸ்ஸின் அருகே மிக நெருக்கமாக சென்றபோது இரு சக்கர வாகனத்தில் சென்றவரின் சட்டை மாட்டி (பஸ்ஸின் முன் படிக்கு அருகில் பட்டை சற்று நீங்கியிருந்துள்ளது) அதில் தடுமாற்றம் ஏற்பட்டு பின்னால் அமர்ந்திருந்த அவர் ஊர்கார பெண் தவறி கீழே விழுந்து பஸ்ஸின் பின் சக்கரத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
விபத்தில் காயமடைந்த நபரை உடனடியாக தமுமுக ஆம்புலன்ஸில் வைத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மணல்மேடு அல்லது பட்டவர்த்தியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் வந்தவர் பெயர் மனோகர் என்று அங்கு இருந்தவர்கள் சொல்கிறார்கள். இறந்த அந்த பெண் பால்வாடியில் ஆசிரியை என்றும் நம்பப்படுகிறது. அந்தபெண் ஊருக்கு செல்ல மயிலாடுதுறையில் காத்திருந்ததாகவும் நான் அழைத்து சென்று விட்டுவிடுகிறேன் என்று சொல்லி மனோகர் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்ததாக சொல்கிறார்கள்.
எது எப்படியோ நீடூர் நெய்வாசல் கடைதெரு மிக நெருக்கடியான இடமாகும் லாரியோ பஸ்ஸோ எதிர் எதிரே இரண்டு வாகனம் மாறமுடியாத இடமாகும் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பஸ்ஸும் மணல் லாரியும் செல்லும் சாலையில் இந்த இடம் மிகவும் குறுகிய இடமாகும். மாலை நேரங்களில் மிகவும் நெருக்கடியாக இருப்பதை பல முறை நமதூர் மீடியாக்கள் புகைப்படங்களாக எடுத்து போட்டிருக்கின்றன. ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.
மேலும் மக்கள் நெறுக்கடி நிறைந்த இடங்களிலும் பள்ளிக்கூடம் உள்ள இடங்களிலும் வேகத்தடை வைப்பது வழக்கம் ஆனால் நீடூர் நெய்வாசல் கடைதெருவிலும், இன்னும் அல்ஹாஜி பள்ளிக்கூடம் உள்ள இடத்திலும் வேகத்தடை அவசியம் ஏற்படுத்தவேண்டும். விபத்து நடக்க அதிக வாய்புள்ள இடங்களில் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக வைப்பதுதான் சிறந்தது.
பலமுறை சுட்டிக்காட்டியும் அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருகின்றன. இனியாவது அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:
Post a Comment
கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது இஸ்லாமிய பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு! எனவே மற்றவரின் அந்தரங்க வாழ்வை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும்