- மௌலவி,அ. முஹம்மது கான் பாகவி
(பித்அத்கள் பரவலாக்கப்படும் இந்த சூழலில் இது தேவை என்பதால் மறு பதிப்பு செய்யப்படுகிறது.)
வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் கல்வி பயின்ற நாட்களும் சரி; ஆசிரியர் பணியாற்றிய நாட்களும் சரி; என் வாழ்நாளில் மறக்க முடியாத அத்தியாயமாகும். அந்தப் பசுமையான நினைவுகள் சுகமான அனுபவங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.