முக்கிய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தங்களின் மேலான கருத்தை இங்கு பதிவு செய்யவும். உங்களின் இடம், வீடு, கடை, விற்பனை செய்ய இதில் இலவசமாக விளம்பரம் செய்து பயனடையுங்கள்.

Saturday, December 13, 2014

சபர் மாதம் பீடை மாதமா?

பி.எம். முஹம்மத் அலீ ரஹ்மானீ
இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளால் இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களிடம் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டனர்.
குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது.
ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர்.
இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும்.

Thursday, October 23, 2014

எச். ராஜாவை, எஸ்.ஐ சுட்டால் எப்படி இருக்கும்?

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் செய்யதுவை, உதவி ஆய்வாளர் காளிதாஸ், காவல் நிலையத்திலேயே துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம், தமிழகத்தை கொதிநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
ஏற்கெனவே இதுபோல சென்னை கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள கானத்தூர் காவல் நிலையத்துக்கு, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தையல் தொழிலாளி ஹுமாயூன், காவல்துறையினரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

நேர்மைக்கு இன்னொரு பெயர் ஷேக் லத்தீப் அலீ!


ஹைதராபாத் சஞ்சீவ் ரெட்டி நகரில் வசித்து வரும் ஷேக் லத்தீப் அலீ, B.Tech (Electrical) படித்து வருகிறார். நேற்று காலை லத்தீப் தனது நண்பருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஓர் அரசு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்முக்கு ரூ. 200 பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது தனது ATM அட்டையை இயந்திரத்தில் செருகிய பின்னர், பாஸ் வேர்டை அழுத்தி உள்ளார். அப்போது திடீரென அந்த ATM இயந்திரத்தின் பாகங்கள் திறந்து கொண்டு அதிலிருந்த ரூ. 26 லட்சம் வெளியே வந்து கொட்டியுள்ளது.

சர்வதேசப்பார்வை (செய்திச்சுருள்)

நியூயார்க்கில் ‘ஹலால்’ இறைச்சிக்கூடம்



மூன்று அமெரிக்க முஸ்லிம்களின் முயற்சியால் நியூயார்க் நகரில், ஹலால் இறைச்சி விற்பனைக்காக, பாதுகாப்பான அறுக்கும் கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமயம் சார்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கவனத்தை இக்கூடம் ஈர்த்துள்ளது. மேன்ஹெடன் தெருவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு இது அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இறைக்கட்டளைக்கேற்ப, தூய்மையான முறையில் அறுக்கப்படும் இறைச்சி தங்களுக்குக் கிடைப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்த இறைச்சிக்கூடத்தின் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது. இங்கு கால்நடைகள் இயற்கையான முறையில் பராமரிக்கப்படுகின்றன. ஹார்மோன்களோ செயற்கை கருத்தரிப்புகளோ கிடையாது. எனவே, முஸ்லிமல்லாத வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பைப் பெறுகிறது. இக்கூடத்தின் வாடிக்கையாளர்களில் 60 விழுக்காடு முஸ்லிமல்லாதவர்களே!

இதற்கிடையே, கலிஃபோர்னியா மாநிலத்தின் சான்டீகோ நகர முஸ்லிம் குடும்பங்களில் பலர், பள்ளிகளின் உணவுப் பட்டியலில் ஹலால் உணவையும் சேர்க்க வேண்டும் என்று கோரிவருகின்றனர். இஸ்லாமிய ஷரீஆ முறைக்கு ஏற்ற உணவுகள் பள்ளியில் இல்லாததால் மாணவர்கள் பள்ளி உணவுகளைத் தவிர்த்துவருகின்றனர்.

இதையடுத்து, சோமாலியாவைச் சேர்ந்த பிலால்மூயா ‘உணவு நீதி இயக்கம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார். கல்வித் துறை பொறுப்பாளர்கள், அதிகாரிகளுடன் சந்திப்புக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கின்றனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முஸ்லிம்களும் பங்கெடுத்துக்கொள்கின்றனர்.

பிராய்லர் சிக்கன் பிரியரா நீங்கள் அப்ப இதை முதலில் படியுங்கள்.

ஆன்ட்டிபயாட்டிக்குகளை செயலிழக்கச் செய்யும் சிக்கன்…

பலருக்கும் பிடித்தமான அசைவ உணவு பிராய்லர் சிக்கன். அது தீவனத்துக்குப் பதிலாக ஆன்ட்டிபயாட்டிக் ஊசி போட்டு வளர்க்கப்படுகிறது.

இந்த சிக்கனை சாப்பிடுவதால் காய்ச்சலுக்கும் மற்ற பிரச்சினைகளுக்கும் நாம் சாப்பிடும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் செயலிழந்து போகலாம் என்பதை அறிவியல், சுற்றுச்சூழல் மையம் நடத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

Sunday, August 31, 2014

உலகம் நடுங்கிய தினம்!


அமைதியான சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள மரியானா தீவீல் இருந்து 1945-ஆம் காலை 6 மணிக்கு அமெரிக்க விமானப் படையின் பி-29 குண்டுவீச்சு விமானமான எனோலாகே புறப்பட்டது. விமானப்படையில் திறமைப்பெற்ற பைலட் பால் டிபட்ஸ் விமானத்தை இயக்கினார். டிபட்ஸின் தாயாரின் பெயர்தாம் அந்த விமானத்திற்கு சூட்டப்பட்டிருந்தது. அந்த அன்னைக்குள் ஓர் குண்டு இருந்தது. ‘லிட்டில் பாய்’ என்ற சங்கேத மொழியிலான ஒரு பேரழிவு அணுக்குண்டு. அன்று வரை உலகில் எங்குமே உபயோகிக்காத குறிப்பிட்ட ரக குண்டு அது. ஏழு மணிநேர நீண்ட பயணத்தின் இறுதியில் எனோலகே ஹிரோஷிமாவின் வான்வழியை அடைந்தது. நேரம் காலை 8.15 ஹிரோஷிமாவுக்கு மேலே 32 ஆயிரம் அடி உயரத்தில் வைத்து லிட்டில் பாயை கீழே வீசிவிட்டு எனோலாகே அதி வேகமாக பறந்து சென்றுவிட்டது.

Thursday, August 28, 2014

பால்காரர் முதல் பிளம்பர் வரை... பெண்களுக்கு காவல்துறை முன்னெச்சரிக்கை அறிவுரை


சென்னை: பால்காரர் தொடங்கி பிளம்பர் என்று பலரையும் நேரடியாகச் சந்திக்கும் பெண்கள் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.

Wednesday, August 27, 2014

நீடூரில் புதிய உதயம் "ஹபீப் நகர்"


நீடூர்  நெய்வாசல் பி.எம். நகர் கடைசியில் அஜீஸ் நகர் பின்புறமாக. ஏனாதிமங்களம் ரோட்டில் இருந்து  நஸ்ருல் முஸ்லிம் பள்ளி செல்லும் வழியில் உள்ளது.

மனையின் சிறப்பு அம்சங்கள்.
20 அடி ஆழத்தில் சுவையான குடிநீர்,
அருகிலேயே நஸ்ருல் முஸ்லிம் பள்ளிக்கூடம், மற்று அரசினர் பள்ளி,
மினி பஸ் வசதி,
மனையில் உடனடியாக வீடு கட்ட மின் இணைப்பு வசதி.
அகலமான சாலை வசதி மேலும் இன்னும் பல சிறப்பு அம்சங்கள். தேவைக்கு உடனே தொடர்பு கொள்ளவும்.

Thursday, July 31, 2014

ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்

- அபூ அப்துல்லாஹ் :
நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றுதான் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பது. இந்நோன்பை நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும். ”யார் ரமளான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச்சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

நீடூர் நெய்வாசலில் நபிவழி திடல் தொழுகை!

நீடூர் நெய்வாசலில் நோன்பு பெருநாளை முன்னிட்டு பெருநாள் தொழுகையை நபிவழி திடல் தொழுகையாக நடத்தப்பட்டது. பக்கத்து ஊர்களில் இருந்தும் மக்கள் களந்துகொண்டார்கள். நபிவழி தொழுகையில் ஆர்வம் உள்ள அனைவரும் ஆர்வமுடன் களந்துகொண்டார்கள்.

காலை சுமார் 7.30 மணிக்கு தொழுகை சலவாத் பாவா காலனியில் உள்ள தவ்ஹீது ஜமாத் மர்கஸ் வலாகத்தில் அமைந்துள்ள திடலில் மிக சிறப்பாக நடைபெற்றது. சகோதரர் புஹாரி அவர்கள் தலைமையில் தொழுகை நடைபெற்றது. அதை தொடர்ந்து குத்பா உரையும் நிகழ்தினார்.

புஹாரி அவர்கள் தனது உரையில் நேன்பு இறை அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதனுக்கு இறை அச்சம் ஏற்படுவதனால் மனித சமுதாயம் முழுவதும் எப்படி பயன் அடைகிறது. என்பதை அழககாக விளக்கினார்.

தொழுகை நடைபெரும் முன்பு சகோதரர் ரபியுதீன் அவர்கள் திடலுக்கு வருகை தந்து அனைவருக்கும் பெருநாள் வாழ்த்து சொல்லி சென்றார்கள்.
சுமார் 300 க்கும் அதிகமான மக்கள் களந்துகொண்டார்கள்.



நீடூர் முழுவதும் புதிய தார் சாலை போடும் வேலை நடைபெருகிறது!

                                                        Rice mill st

நீடூர் நெய்வாசல் மற்றும் கங்கணம்புத்தூர் முழுவதும் புதிய சாலை அமைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பும் இதுபோன்று சாலை அமைக்கும் பனி நடந்தாலும் தற்போது மிகவும் உறுதியன சாலைகள் போடப்படுகின்றன. இரண்டு முறை பெரிய கருங்கள் ஜல்லி போடப்பட்டு பிறகு தார் சாலை போடப்படுகிறது.

பெருநாள் வாழ்த்து!

அஸ்ஸலாமு அலைக்கும் அனைவருக்கும் எமது இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்காள்!!