நீடூர் நெய்வாசலில் நோன்பு பெருநாளை முன்னிட்டு பெருநாள் தொழுகையை நபிவழி திடல் தொழுகையாக நடத்தப்பட்டது. பக்கத்து ஊர்களில் இருந்தும் மக்கள் களந்துகொண்டார்கள். நபிவழி தொழுகையில் ஆர்வம் உள்ள அனைவரும் ஆர்வமுடன் களந்துகொண்டார்கள்.
காலை சுமார் 7.30 மணிக்கு தொழுகை சலவாத் பாவா காலனியில் உள்ள தவ்ஹீது ஜமாத் மர்கஸ் வலாகத்தில் அமைந்துள்ள திடலில் மிக சிறப்பாக நடைபெற்றது. சகோதரர் புஹாரி அவர்கள் தலைமையில் தொழுகை நடைபெற்றது. அதை தொடர்ந்து குத்பா உரையும் நிகழ்தினார்.
புஹாரி அவர்கள் தனது உரையில் நேன்பு இறை அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதனுக்கு இறை அச்சம் ஏற்படுவதனால் மனித சமுதாயம் முழுவதும் எப்படி பயன் அடைகிறது. என்பதை அழககாக விளக்கினார்.
தொழுகை நடைபெரும் முன்பு சகோதரர் ரபியுதீன் அவர்கள் திடலுக்கு வருகை தந்து அனைவருக்கும் பெருநாள் வாழ்த்து சொல்லி சென்றார்கள்.
சுமார் 300 க்கும் அதிகமான மக்கள் களந்துகொண்டார்கள்.